தேனியில் ஒரே நாளன்று 184 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளையும், சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளன்று 184 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 18,997 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 85 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17,625 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 1,161 நபர்கள் உள்ளனர்.