குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி பகுதியில் விக்னேஷ் கலைச்செல்வி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று கலைச்செல்வி தனது அறையை பூட்டிக் கொண்டு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
அப்போது சத்தம் கேட்டு விக்னேஷின் தாயார் ஓடி வந்து பார்த்தபோது கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து விக்னேஷை அழைத்துள்ளார். அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கலைச்செல்வி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கலைச்செல்விக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆனதால் அவர் இறப்பில் மர்மம் ஏதும் உள்ளதா என்பது குறித்து உதவி கலெக்டர் மணிவேலன் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.