Categories
மாநில செய்திகள்

Just In: மறு உத்தரவு வரும் வரை மூட அதிரடி உத்தரவு..!!!

மறு உத்தரவு வரும் வரை புதுச்சேரி மாநிலத்தில் சில இடங்களை மூடுவதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து புதுச்சேரியிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிறுக்கிழமை ஊரடங்கு மற்றும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோன்று தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொது அரங்குகள், அழகு நிலையங்கள், சலூன் கடைகள் போன்றவற்றை மூடுவதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். திருமணங்களில் 50 நபர்கள் மற்றும் இறுதி சடங்குகளில் 25 பேர் மட்டுமே அனுமதி. கோவில்களில் வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |