Categories
லைப் ஸ்டைல்

சுக்கை மிஞ்சிய வைத்தியம் உண்டோ…. நோய்களை ஓட ஓட விரட்டி அடிக்கும்….!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி சுக்கில் அதிக அளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சுக்கை இழைத்து பற்றுப் போட தலைவலி நீங்கும். சுக்கு சிறு துண்டு வாயிலிட்டு மென்று அடக்கிவைக்க பல்வலி தீரும். சுக்கை நசுக்கிப் ஒரு துணியில் சிறு மூட்டை கட்டி காதில் வைத்திருக்க காதடைப்பு, நீரடைப்பு தீரும். சுக்கு பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க அஜீரணம் நீங்கும். உஷ்ண பேதி, சீத பேதி மற்றும் வாந்தி கட்டுப்படும். மார்பு எரிச்சல், வயிற்று வலி, நெஞ்சு வலி மற்றும் புளியேப்பம் இவற்றை போக்கும். சளி இருமலைப் போக்கும். வாத நோய்களை கட்டுப்படுத்தும்.

குதம், ஆசனவாய் கடுப்பு எரிச்சல் முதலியவற்றை போக்கும். காசம் எனும் ஆஸ்துமா மற்றும் சைனஸ் நோய்களை கட்டுப்படுத்தும். இதய நோய்கள் மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்தும். உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் கட்டிகள் இவை குணப்படுத்தும். நரம்புகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்து. சுக்கு தைலம் தலைக்கு தேய்த்து குளிக்க ஒற்றைத் தலைவலி, தலைவலி, சைனஸ் மற்றும் காது வலி தீரும். தினம்தோறும் ஏதேனும் ஒரு வகையில் சுக்கை நாம் உட்கொள்ள நோய்கள் வராமலும், வந்த நோய்களை நீக்கவும் பேருதவியாக இருக்கும்.

Categories

Tech |