ஹைதராபாத் ஆட்டத்தை டைய் செய்தும் , சூப்பர் ஓவரில் ஹைதராபாத்தை வீழ்த்தி, டெல்லி4 வது வெற்றியை கைப்பற்றியது .
நேற்று சென்னை எம் .எ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற , 20 வது லீக் போட்டியில் , சன்ரைசஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பேட்டிங்கை தேர்வு செய்தது .தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்திவி ஷா – ஷிகர் தவான் களமிறங்கினர் .இதில் பிரித்வி ஷா தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டி வந்தார் .இவர் 39 பந்துகளில் 7 பவுண்டரி ,1 சிக்ஸர் அடித்து விளாசினார் .பிறகு தவான் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து பிரித்வி ஷா 53 ரன்கள் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பண்ட் 37 ரன்கள் , ஹெட்மையர் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதிவரை ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 34 ரன்களை குவித்தார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவித்தது .அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 160 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது.தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் – பேர்ஸ்டோவ் ஜோடி களமிறங்கியது. இதில் கேப்டன் வார்னர் 6 ரன்கள் ,பேர்ஸ்டோவ் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய விராட் சிங் (4) ரன்கள் , கேதார் ஜாதவ் (9) ரன்கள் மற்றும் அபிஷேக் வர்மா (5) ரன்கள் மற்றும் ரஷித் கான் (0) ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகளை இழக்க, மறுபுறம் கேன் வில்லியம்சன் தனியாக போராடி ,அரைசதம் அடித்தார்.
இவருடன் விஜய் சங்கர் இணைந்தார். இறுதியில் 2 ஓவர்களில் ஹைதராபாத்துக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. இதில் 19-வது ஓவரில் விஜய்சங்கர் ஆட்டமிழக்க ,இறுதியாக ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்து போட்டியை சமன் செய்தது. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. இந்த சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணியின் வார்னர் -கே வில்லியம்சன் களமிறங்கினர். இந்த ஓவரில் அக்சர் படேல் பந்து வீச, ஹைதராபாத் அணி 7 ரன்களை மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 6 பந்துகளில் வெற்றிக்கு தேவையான ரன்களை குவித்து ,4-வது வெற்றியை கைப்பற்றியது.