Categories
மாநில செய்திகள்

இன்று காலை 9.15 மணிக்கு…. முதல்வர் முக்கிய ஆலோசனை – வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வர முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா சூழல் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஆக்சிஜனை உற்பத்தி தொடர்பான ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்தும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் அதுகுறித்து இன்று 9:15 மணிக்கு தலைமைச் செயலகத்தில் விவாதம் நடைபெற உள்ளது.

Categories

Tech |