Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் இன்று முதல்…. புதிய கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது போல புதுச்சேரியிலும் புதியகட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு கொண்டு வர புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் முடிவு செய்துள்ளார். அதன்படி வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொது அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |