Categories
உலக செய்திகள்

இளைஞர்களை குறிவைக்கும் கொரோனா வைரஸ்…. 3 வது அலை உருவாகலாம்…. சுகாதாரதுறை எச்சரிக்கை….!!!

இந்தியாவைப் போலவே இலங்கையிலும் புதிய உருவ மாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதன்படி தற்போது இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா போன்ற  நாடுகளிலும் இந்த புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் தாக்குதல் பரவி வருவதாக கூறியுள்ளார்.

மேலும் இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களை விட இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும் மக்களிடையே  மிக வேகமாக பரவ கூடியதாகவும் இருப்பதாகக் கூறியுள்ளனர். இது குறித்த தகவலை இலங்கை நோய் எதிர்ப்புத்துறை தலைவர் நீலிகா மாலவிகே அறிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் நடைபெற்ற புத்தாண்டிற்கு பிறகுதான் இந்த பாதிப்பு அதிகம் காணப்படுவதாகவும் இதனால் இளைஞர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் மருத்துவர் குழு கூறியுள்ளது. இலங்கை சுகாதார துறை வல்லுநர்கள் வெளியிட்டுள்ள தகவலில் இலங்கையில் இந்த வைரஸ் 3 வது அலையையும் ஏற்படுத்தக் கூடியது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தகவல் இலங்கை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Categories

Tech |