ஒரே நாளில் 161 கடைகளில் 8 1/4 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
அதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல் டாஸ்மார்க் கடைகளும் நேற்று மூடப்பட்டுள்ளன. அதனால் மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுவை முதல் நாளே வாங்கி இருப்பு வைத்துக் கொண்டுள்ளனர். இதனால் நேற்று முன்தினம் வழக்கத்தைவிட மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது.
மேலும் வழக்கமாக தஞ்சை மாவட்டத்தில் 4 முதல் 5 கோடி வரை மது விற்பனை நடைபெறுவது வழக்கம். ஆனால் நேற்று ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை இரவு தஞ்சை மாவட்டத்தில் உள்ள 161 டாஸ்மாக் கடைகளில் மொத்தம் ரூபாய் 8 கோடியே 22 லட்சத்து 59 ஆயிரம் 850 ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.