இலங்கையில் நடத்தபட்ட தொடர் குண்டுவெடிப்பில் சம்பந்தபட்டவர்களை சிஐடி கைது செய்துள்ளது.
இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 2019 ஆம் ஆண்டில் ஏப்ரல் 21ஆம் தேதி 40 பேர் உள்பட 250 மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர் . இத்தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இக்கொடூர சம்பவத்திற்காக 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தற்போது சிஐடி போலீசார் தொழில் மற்றும் வர்த்தக துறை மந்திரி ரிஷாத் பதியுதீன் மற்றும் சகோதரர் ரியாத் இருவரை கைது செய்திருக்கின்றனர்.
இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சாட்சிகளின் வாக்குமூலங்கள், சூழல் மற்றும் அறிவியல் சான்றுகள் என அனைத்தும் இவர்கள் பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயல்பட்ட குற்றங்கள் குறித்து அனைத்து சான்றுகளும் தன்வசம் வைத்திருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.