Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“பிறந்து 20 நாட்கள் தான் ஆச்சு” ஆசையாக பார்க்க சென்ற தந்தை.. திடீரென நடந்த துயர சம்பவம்…!!

தனது குழந்தையை பார்ப்பதற்காக சென்ற தந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள அடைக்கலம் பட்டணத்தில் சேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரதீபன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கீர்த்தி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்னர்தான் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனையடுத்து தனது குழந்தையை பார்த்ததற்கு இரவு நேரத்தில் பிரதீபன் அடைக்கலபட்டணத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் பிரதீபன் மகிழ்வண்ணநாதபுரம் அருகே சென்றபோது அவ்வழியாக வேறு ஒரு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக  2 மோட்டார் சைக்கிகளும் ஒன்றுக்கொன்று நேர் எதிராக மோதிக்கொண்டன. இந்த விபத்தில்  சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பிரதீபனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.   ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட  சிகிச்சை பலன் அளிக்காமல் பிரதீபன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |