Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை பேரில் முகநூலில் போலி கணக்கு…. ரசிகர்களுக்கு எச்சரிக்கை…!!!

நடிகை அதுல்யா ரவி தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியான அடுத்த சாட்டை, காதல் கண் கட்டுதே, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவரது பெயரில் முகநூல் பக்கத்தில் போலி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனைக் கண்ட அதுல்யா ரவி தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முகநூல் பக்கத்தில் யாரோ ஒரு போலி கணக்கை உருவாக்கி தனிப்பட்ட முறையில் மற்றும் திரைப்படத் துறையில் எனக்கு தெரிந்தவர்களுக்கு செய்தி அனுப்புவது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. இது மிகவும் மோசமான காரியம். இது குறித்து ஏற்கனவே புகார் அளித்துள்ளேன்.

மேலும் நான் முகநூல் பக்கத்தில் இல்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். தயவு செய்து இது குறித்து புகாரளிக்கவும்” என்று பதிவிட்டுள்ளார். இதுபோன்று திரைப் பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்தி மர்ம கும்பல் சிலர் போலி கணக்குகளை தொடங்கி மோசடி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |