Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

செல்போன் மூலம் கஞ்சா விற்பனை…. தேடுதல் வேட்டையில் தனிப்படை…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

செல்போன் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மூன்று வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் பகுதிகளில் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை ஒன்றை அமைத்துள்ளார்.

அதில் இந்த தனிப்படை கஞ்சா விற்பனை செய்பவர்களை ரகசியமாக நோட்டமிட்டு வந்தது. அதன்பின் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த ராமகிருஷ்ணன் வெங்கடேசன் தினேஷ் குமார் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் அதிரடியாக பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 800 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |