வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக ஆதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நடந்து முடிந்த வேலூர் மக்களவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கூட்டணி சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமியும் இவர்களோடு சேர்த்து சுயேச்சை என 28 பேர் போட்டியிட்டாலும் இது மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. பதிவாகிய வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைத்து பாதுகாக்கப்பட்ட நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
காலை முதலில் தொடங்கிய தபால் வாக்குகள் எண்ணிக்கையில் இருந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று வந்தார். அதிமுக வேட்பாளகர் AC சண்முகம் 15,000 வாக்குகள் முன்னிலை பெற்றநிலையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இதை தொடர்ந்து தீடிர் திருப்பமாக கதிர் ஆனந்த் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கும் நிலையில் மாறி மாறி வாக்கு வித்தியாசம் இருந்து வந்தது.
கடைசி வரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும் , அதிமுகவின் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும் , நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளும் பெற்றனர். இதில் நோட்டாவுக்கு 9,805 வாக்குகள் பதிவாகியுள்ளது. முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் ஒப்புகை சீட்டு என்னும் பணி நிறைவடைந்த நிலையில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக ஆதிகாரபூர்மாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.