Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எல்லாமே நாசமா போச்சு…. எல்லை மீறிய அட்டகாசம்… சோகத்தில் மூழ்கிய விவசாயி…!!

காட்டு யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தி வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசம் செய்கின்றன. இந்த காட்டு யானைகளை தமிழக, கர்நாடகா மற்றும் ஆந்திர வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுகின்றனர். இந்நிலையில் 5 காட்டு யானைகள் இரவு நேரத்தில் வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் கொங்கணபள்ளி கிராமத்துக்குள் நுழைந்து நரசிம்மா நாயுடு என்பவருடைய வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன.

இதனையடுத்து காட்டு யானைகள் வாழை மரங்களை மிதித்து சேதப்படுத்தி விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. அதன்பின் காலையில் தனது தோட்டத்திற்கு சென்ற நரசிம்மா வாழை மரங்கள் சேதமடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். எனவே காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நரசிம்மா  வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் காட்டு யானைகளால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |