தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இன்று முதல் திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள், மதுபான பார்களை செயல்பட அனுமதி இல்லை. புதுச்சேரி தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைவருக்கும் இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளிலும் அழகு நிலையங்கள், சலூன் கடைகள் இயங்க அனுமதி இல்லை. பெரிய கடைகள், ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள் செயல்படவும் அனுமதி இல்லை.
மேலும் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை. ஆனால் முழு ஊரடங்கு தவிர்த்த மற்ற நாட்களில் மளிகை காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் வழக்கம் போல செயல்படலாம். எந்த ஒரு வழிபாட்டு தளத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை. ஆனால் உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுலக்கு மட்டும் நடத்தலாம். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மற்றும் இறுதி ஊர்வலத்தில் 25 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக் கப்பட்டுள்ளது.
மின் வணிக சேவைகள். வழிபாட்டுத் தலங்களில் தினமும் நடைபெறும் பூஜைகள் பிரார்த்தனைகள் மற்றும் சடங்குகள் நடத்த தடையில்லை. பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் பயணிக்க அனுமதி. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் மூன்று பேர், ஆட்டோக்களில் இரண்டு பேர் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.