விஜய் பட ஒளிப்பதிவாளரின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவான மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தான் ஜி.கே.விஷ்ணு. இவருக்கும் மகாலட்சுமி என்பவருக்கும் நேற்று காலை சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருவதால், இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மிகவும் எளிமையான முறையில் இவரது திருமணம் நடைப்பெற்றுள்ளது. அந்த வகையில் மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர்கள், மிக முக்கிய சொந்தங்கள் மற்றும் நெருக்கிய நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் மணமக்களை நேரில் சென்று வாழ்த்து உள்ளனர். இதைத்தொடர்ந்து பல திரைப்பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வாயிலாக புதுமணத் தம்பதிகளை வாழ்த்தி வருகின்றனர்.