Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு…. பாதிக்கப்படும் வாழ்வாதாரம்…. நிவாரணம் வேண்டும் தொழிலாளர்கள்….!!

சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் கார், வேன், ஆட்டோ தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு சுமார் 5000 சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்வதுண்டு. அவர்கள் வாடகைக்கு கார் வேன் ஆட்டோ எடுத்துச் செல்வதும் வழக்கமான ஒன்று. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து கொண்டே இருக்கின்றது.

இந்த நிலையில் திருக்கடையூரில் 500க்கும் மேற்பட்ட கார் வேன் ஆட்டோ இயக்கப்பட்டு வருகின்றது, தற்போது கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கால் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு கொரோனாவின் போது தங்களுக்கு எந்தவித நிவாரணம் வழங்கவில்லை.

இதுகுறித்து கார் வேன் ஆட்டோ தொழிலாளர்கள் கூறுகையில் “தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் மிகவும் வறுமையில் இருக்கிறோம். குடும்பம் நடத்துவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. கார் வேன் ஆட்டோ அனைத்தையுமே ஸ்டாண்டுகளில் நிறுத்தி வைத்திருக்கிறோம். எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு ஏதேனும் செய்ய வேண்டும். மேலும் உரிய நிவாரணம் மத்திய மாநில அரசுகள் எங்களுக்கு வழங்க வேண்டும்” என அவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |