புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பண்ணசுவாமி கோவிலுக்கு சொந்தமான காளை உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குறும்பட்டி கிராமத்தில் கருப்பண்ணசுவாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் பொது மக்கள் கோவிலுக்கு சொந்தமாக காளை ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த காளைக்கு கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ள நிலையில் திடீரென இறந்து விட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் பொது மக்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர்.
இதனையடுத்து கருப்பண்ண சுவாமி கோவிலில் பொது மக்கள் இறுதி அஞ்சலிக்காக காளை வைக்கப்பட்டுள்ளது. இதில் ஊர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஜல்லிக்கட்டு காளைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து காளை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.