Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு… 4 மாதங்களுக்கு மட்டுமே அனுமதி..? முதல்வர் அறிவிப்பு..!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இவற்றை தடுப்பதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசுகையில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டியது அரசு நோக்கமல்ல, ஏனெனில் அதை மூடியதே தமிழக அரசுதான் என்று தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட்டை ஆக்சிஜனுக்காக மட்டும் நான்கு மாதங்களுக்கு திறக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |