நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் இன்று முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் தொற்று அதிகரித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டியது அரசு நோக்கமல்ல, முடியாதே தமிழக அரசு தான் என்று தெரிவித்தார்.
மேலும் ஸ்டெர்லைட்டில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்ஸிஜன் உற்பத்தியை அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிகமாகவே அனுமதி அளிக்க வேண்டும். ஆக்சிஜன் தயாரிக்க குறிப்பிட்ட காலவரம்பிற்கு மட்டும் ஆலைக்கு அனுமதி அளிக்க வேண்டும். தமிழக அரசுதான் ஆலைக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்று திமுக தெரிவித்துள்ளது.