பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை காவியா கருப்பு நிற சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மறைவுக்குப் பின் அந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்தவர். தற்போது இவர் முல்லை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் காவியா நடித்து வருகிறார் . இந்நிலையில் காவியா கருப்புநிற சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.