Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்குறதே இல்ல..! வாகன சோதனையில் சிக்கியவர்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் ஊரடங்கின் போது தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி 4 ரோடு சந்திப்பில் நேற்று முழு ஊரடங்கை முன்னிட்டு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அடையாள அட்டை வைத்திருந்தவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கினர்.

மேலும் தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சிங்கம்புணரி தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில், துணை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

Categories

Tech |