மனதை மயக்கும் சுவையுடைய குங்குமப்பூ லஸ்ஸி செய்யலாம் வாங்க .
தேவையான பொருள்கள்:
தயிர் – 2 கப்
சர்க்கரை – 4 ஸ்பூன்
பால் – 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்
குங்குமப்பூ – 2 சிட்டிகை
நட்ஸ் – 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில், பாலுடன் குங்குமப்பூவை போட்டு ஊற வைக்க வேண்டும். பிறகு அதனுடன் தயிர் ,
சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து, மிக்ஸியில் நுரைக்க நுரைக்க அடித்துக் கொள்ள வேண்டும் . பின் அதன் மீது நட்ஸ் தூவி சில்லென்று பரிமாறினால் சுவையான குங்குமப்பூ லஸ்ஸி தயார் !!!