சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் உள்ள புஷ்பவனேசுவரர் கோவிலில் சிறப்பு சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் சிறப்பு வாய்ந்த புஷ்பவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நந்திபெருமானுக்கு அலங்கார பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது. அதன் பின் சவுந்திரநாயகி, புஷ்பவனேஸ்வரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் சொக்கநாதபுரம் சிவன் கோவிலிலும், பாகனேரி சிவன் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்து சென்றனர்.