‘இதுவும் வெற்றி இலக்குக்குள் வருமென்று’ வேலூர் மக்களவை தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும் , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கினைப்பாளர் ஓபன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் ,குறைந்த வாக்கு வித்தியாசம் என்றாலும் இது கழகத்தை பொறுத்த வரை வெற்றி என்ற இலக்கத்திற்குள் உள்ளடங்கும். இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விட்டுச் சென்ற வாக்கு சதவீதம் சிந்தாமல் சிதறாமல் நம்மிடம் அப்படியே உள்ளது என்பதை தான் வேலூர் தொகுதியில் இரட்டை சின்னத்தில் பெற்றிருக்கும் வாக்குகள் பறை சாற்றுகின்றன. தேர்தல் களப்பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உழைத்திட்ட கழக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த வேலூர் வாக்களப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்திருந்தனர்.