Categories
மாநில செய்திகள்

கொரோனா 2வது அலை பரவலுக்கு…. தேர்தல் ஆணையமே காரணம் – உயர்நீதிமன்றம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக இல்லை என்றால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா 2வது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம். அரசியல் கட்சிகளும் இஷ்டம்போல பிரச்சாரம் செய்ததே கொரோனா பரவலுக்கு காரணம். தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |