இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது.
இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக மிக கடுமையான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. ஆகையால் இந்தியாவின் நிலையை சரி செய்வதற்காக சர்வதேச நாடுகள் உதவி கரம் நீட்டி வருகின்றது.
இந்தியாவுக்கு உதவியாக நின்று தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன் வருவதாக அமெரிக்கா கனடா பிரான்ஸ் போன்ற நாடுகள் கூறியிருக்கின்றனர். மேலும் இதனை தொடர்ந்து இந்தியாவிற்காக கூகுள் நிறுவன அதிகாரி சுந்தர் பிச்சை ரூ. 135 கோடி நிதி உதவி வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் கொரோனா சூழல் பற்றி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி இ ஓ சத்ய நாதெல்லா, தற்போது இந்தியாவில் கடும் சூழல் நிலவி வேதனையை அளித்து வருவதாகவும் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார்.