Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“இவங்களால தான் சாகப் போறேன்” வாலிபரின் உருக்கமான வீடியோ பதிவு… கைது செய்யப்பட்ட தம்பதியினர்…!!

முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரின் மனைவி இளைஞனை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டனர். 

திருச்சி வாத்தலை அடுத்து  உள்ள செங்கரை குடியிருப்பு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் லாரி டிரைவரான வினோத் கடந்த  மாதம்  விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார்.  இதனை அடுத்து வினோத் தான் தற்கொலை செய்து கொள்வதற்க்கு முன்பு  தனது செல்போனில் அதற்கான காரணத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலரும், அவரின் மனைவியும் தான் தனது சாவுக்கு காரணம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் தனது மகன் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வினோத்தின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.  மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரது மனைவியை கைது செய்து வினோத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |