சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சித்திரை மாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் பங்குனி மாதத்தன்று பங்குனி உற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து தற்போது சித்திரை திருவிழாவும் களைகட்டியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் சிறப்பு வாய்ந்த சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் சித்திரை மாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்களும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சித்தர் முத்துவடுகநாதர் சாமி சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.