Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பெட்டகம்…. ரூ 50க்கு விற்பனை…. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிடைக்கும்….!!

மதுரை மாநகராட்சி நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்து பெட்டகத்தை ரூபாய் 50 க்கு விற்பனை செய்துள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமடைந்து வருகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்து பெட்டகம் ரூபாய் 50 க்கு விற்பனை செய்யும் பணியினையும் மாநகராட்சி தொடங்கியுள்ளது. இந்த மருந்து பெட்டகத்தை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இதில் மாநகராட்சி கமிஷனர் தலைமை தாங்கி கலெக்டர் அன்பழகன் மருந்து பெட்டகத்தை வழங்கி வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது “மதுரை மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்களும் சமூக ஆர்வலர்களும் காவல் துறையும் வருவாய்த் துறையும் சுகாதாரத் துறையும் இணைந்து கொரோனாவை விரட்டியடிக்க வேண்டும். மேலும் இந்த மருந்து பெட்டகத்தின் விலை ரூபாய் 50 ஆகும். இதில் ஆடாதோடை மணப்பாகு. தாளிசாதி மாத்திரைகள், கபசுர குடிநீர் சூரணம் ஆகியன உள்ளன.

இது அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்திகளை தூண்டக் கூடியவை. அதனால் அனைவரும் இதை வாங்கி பயன்பெற வேண்டும். மேலும் இந்த பெட்டகம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்” என அவர் கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் உதவி கமிஷனர் சேகர், நகர்நல அலுவலர் குமரகுருபரன், பிரேம்குமார், சுரேஷ்குமார், சண்முகம், உதவி செயற்பொறியாளர் மனோகரன், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், நவீன் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |