சன் டிவி ‘அன்பே வா’ சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா, சித்தி 2, வானத்தைப் போல உள்ளிட்ட பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் அன்பே வா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் டெல்னா டேவிஸ்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து டெல்னா டேவிஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் உடனே தனிமைப்படுத்திக் கொண்டதால் தற்போது குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவசிய தேவை இல்லாமல் தயவு செய்து யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .