நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சாமி தரிசனம் செய்ய வந்த ஏராளமான பக்தர்கள் மலை அடிவாரத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டனர். கொரோனா காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதி இல்லை என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.