இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட 2 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பெருமளவில் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த கொரோனா பாதிப்பு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் உச்சத்தை அடைந்துள்ளது. மேலும் 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரு கின்றனர். மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகளும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டு பல பேர் உயிரிழந்து வருகின்றனர்.
இதனால் மத்திய அரசு அதற்காக நடவடிக்கை எடுத்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அவ்வப்போது அனுப்பி வைத்து வருகிறது. இந்த சூழ்நிலையை பூர்த்தி செய்வதற்காக அமெரிக்கா நியூயார்க் நகரிலிருந்து சுமார் 5 டன் எடையுடைய 300 ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏர் இந்தியா நிறுவனம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த சிலிண்டர்கள் அனைத்தும் இன்று மதியம் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஏற்கனவே இந்தியாவில் நிலவும் இந்த கடுமையான சூழ்நிலைக்கு அமெரிக்கா எப்பொழுது வேண்டுமானாலும் உதவிக்கு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்திருந்தார்.
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னதாக நிலவிய கொரோனா தொற்று பாதிப்பின் போது அமெரிக்காவில் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் இல்லாதபோது இந்தியா அரசு உடனடியாக அதற்கு வேண்டிய உதவிகளை அளித்தது. ஆகையால் தற்போது இந்தியாவில் நிலவும் கடுமையான சூழலை மனதில் கருதி அமெரிக்கா தக்க சமயத்தில் உதவிக்கு வருவதாக தெரிவித்திருக்கிறார்.