Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சொன்னா புரியாதா…. நம்ம நல்லதுக்குதான் சொல்லுறாங்க…. ஓட்டுனருக்கு அபராதம் விதிப்பு….!!

அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட அதிக நபர்களை ஏற்றுக்கொண்ட கொண்டு சென்ற தனியார் பேருந்து பஸ் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் ராஜகிரி மற்றும் பண்டாரவாடை கிராமங்களில் காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் பொது இடங்களில் முக கவசம் அணியாத 5 பேருக்கு தலா ரூபாய் 200 அபராதம் விதித்து மொத்தம் ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.

இதனை அடுத்து பண்டாரவாடை கிராமத்தில் தனியார் பேருந்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட அதிக பயணிகளை ஏற்றிச் சென்றது தெரியவந்துள்ளது. உடனடியாக வருவாய் ஆய்வாளர் சரவணன் அங்கு சென்று பேருந்தை நிறுத்தி அரசு வழி காட்டிய படி அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மிகாமல் பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி ஓட்டுனருக்கு அபராதமும் விதித்துள்ளார்.

Categories

Tech |