கொரோனாவின் தாக்கத்தால் இன்று முதல் அனைத்து தியேட்டர்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் தற்போது தீவிரமாக பரவி வருவதால் தியேட்டர்கள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டது. மேலும் மறு உத்தரவு வரும்வரை தியேட்டர்கள் திறக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் சில நாட்களில் ரிலீசாக உள்ள புதிய படங்கள் ஓடிடியில் வெளியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்படி நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’, விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’, திரிஷாவின் ‘ராங்கி’ ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.