புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொடும்பாளூர் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவி இருந்தார். இவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது துறையூரை சேர்ந்த சல்மான் கான் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக தங்கராஜ் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த விபத்தில் படுகாயமடைந்த புவனேஸ்வரியை கணவர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.