Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்… முதியவருக்கு நடந்த சோகம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் ராஜா என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த முதியவர் சூரியநாராயணன் ஏரி அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முதியவர் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி  இறந்துவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவேரிப்பட்டணம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினரின் உதவியோடு முதியவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவேரிப்பட்டணம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |