Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா…. அலறியடித்துக்கொண்டு ஓடும் வடமாநில தொழிலாளர்கள்….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் தமிழகத்தில் இருந்து 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பியதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது. 5 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வருவதாகவும், இவற்றில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரும்பி விட்டனர். குறிப்பாக திருப்பூர் மற்றும் கோவை பகுதிகளில் ஆடை நிறுவனங்களில் வேலை செய்து வந்த 80 சதவீதம் பேர் திரும்பியதாக கூறப்படுகிறது.

Categories

Tech |