Categories
தேசிய செய்திகள்

மக்களே…. வதந்திகளுக்கு இரையாகாதீர்கள்…. பிரதமர் மோடி எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் கட்டாயம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி பற்றி பரப்பப்படும் வதந்திகள் இரையாகாதீர்கள் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். சந்தேகம் இருந்தால் நம்பகமான ஆதாரங்கள் மூலம் கொரோனா வைரஸ், தடுப்பூசி குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் இலவச தடுப்பூசியை அனுப்பி வைக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |