காட்டு யானைகள் தங்களது குட்டிகளுடன் உலா வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் ஏராளமான காப்பி மற்றும் தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன. மேலும் அங்கு ஊடுபயிராக வளர்க்கப்படும் பலா மரங்களில் பலாப்பழங்கள் தற்போது தொங்குவதால் காட்டுயானைகள் அதனை தின்பதற்கு வனப்பகுதியில் இருந்து வருகின்றன. இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து திடீரென 4 காட்டு யானைகள் கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட பகுதிக்குள் புகுந்து தொழிலாளர்களின் வீடுகளை முற்றுகையிட்டு உள்ளது. இது குறித்து தகவலறிந்த சேரம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இவ்வாறு காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் உலா வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.