புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சேந்தன்குடி கிராமத்தில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அஞ்சலி என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் வீட்டில் கறவை மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் அஞ்சலி வீட்டிற்கு அருகே மாடுகளை கட்டி போட்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இரண்டு மாடுகள் பரிதாபமாக இறந்து விட்டது.
இதனையடுத்து அஞ்சலி மின்சார வாரிய அதிகாரிகளுக்குக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறுந்து விழுந்த மின் கம்பியை சரி செய்துள்ளனர். ஆனால் இந்த மின் கம்பி ஏற்கனவே தாழ்வாக சென்றுள்ளது. இதனை சரிசெய்ய பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அஞ்சலி கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.