தமிழகத்தில் அரசு கலை , அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் புதிய உதவிப் பேராசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன . இந்த காலி பணி இடங்களுக்கு ஆண்டுதோறும் பதினோரு மாதங்களுக்கு மட்டும் தொகுப்பூதியத்தில் உதவி பேராசிரியர் பணி அமர்த்தப்படுகின்றனர் . 11 மாதங்களுக்கு பின் நியமனம் மீண்டும் மாற்றி அமைக்கப்படுகிறது .
அந்த வகையில் இந்த ஆண்டு 2653 இடங்களுக்கு கல்லூரிகள் அனுமதி கோரிய நிலையில் 2120 இடங்களுக்கு அனுமதி அளித்த உயர்கல்வித்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது இதன்படி 15,000 ஊதியத் தொகையில் 2,120 உதவிப் பேராசிரியர்களை கல்லூரி நியமித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின் 11 மாதங்களுக்கு 2,120 உதவிப் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்க 34 கோடியே 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளது.