பட்டப்பகலில் கரடி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து சாலையில் உலா வந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை ஒட்டி காட்டெருமை, சிறுத்தை புலி, கரடி போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
இந்நிலையில் கரடி ஒன்று கேத்தரின் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் சக்தி நகருக்கு செல்லும் சாலையோரத்தில் பட்டப்பகலில் உலா வந்து உள்ளது. மேலும் முழு ஊரடங்கு என்பதால் அப்பகுதி பொதுமக்களின் நடமாட்டம் இல்லை. அதன்பின் கரடி சிறிது நேரம் அங்கு சுற்றித் திரிந்துவிட்டு அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்க்குள் புகுந்து விட்டது.