தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அங்கு ஒரே நாளில் 261 பேருக்கு ஒரு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு 11, 156 பேருக்கு தற்போது வரை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அங்கு 172 பேர் கொரோனா தொற்றிற்கு பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் 9,482 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் 60 வயதுடைய பெண் ஒருவரும் 60வயதுடைய முதியவரும் கடந்த 19ஆம் தேதியன்று உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிக்சை பெற்று வந்த இரண்டு முதியவர்களும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.