நாசாவில் பணிபுரிந்த ஒருவர் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை தகனம் செய்வதற்கு இடமில்லாமல் போனது என இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதில் “என்னுடைய உறவினர் ஒருவர் அமெரிக்காவில் Nuclear Science படித்து விட்டு நாசாவில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் டெல்லியில் இருக்கும் போது கொரோனா தொற்று ஏற்பட்டு பலியாகியுள்ளார்.
ஆனால் டெல்லியில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிக்கவோ அல்லது புதைக்கவோ இடம் இல்லாமல் போயுள்ளது. இதனால் அவரின் உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பலரின் உடல்கள் வரிசையில் காத்திருக்கின்றன. இருப்பினும் மிகுந்த சிரமப்பட்டு நாளை காலையில் அவரின் உடலை எரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என அவர் பதிவிட்டிருந்தார்.