Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மதுவில் அதை கலந்துட்டாங்க…. வாலிபருக்கு நடந்த சோகம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள நரிக்குடி மந்து பகுதியில் பூவரசன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பூவரசன் மதுவில் களைக் கொல்லி மருந்தினை கலந்து குடித்து மயங்கி விழுந்துவிட்டார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூவரசனுக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக பூவரசன் மதுவில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ஊட்டி நகர மத்திய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |