நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் பல மாநிலங்களில் மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் என்று அறிவித்தும், தேர்வுகளை ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றது.
அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மே 31-ஆம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.