நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மக்கள் எங்கு சென்றாலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், சானிடைசர் பயன்படுத்துதல் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மத்திய அரசு மக்கள் வீடுகளில் இருக்கும்போதும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.