Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்…? – உயர்நீதிமன்றம் பரிந்துரை…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் மே 1,2ஆம் தேதிகளில் தமிழகத்தில் முழுஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. முழுஊரடங்கு தொடர்பாக ஏப்.28ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பை வெளியிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |